கொரோனாவின் கட்டுப்பாட்டில் சென்னை.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,641-ஆக அதிகரிப்பு !

கொரோனாவின் கட்டுப்பாட்டில் சென்னை.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,641-ஆக அதிகரிப்பு !

கொரோனாவின் கட்டுப்பாட்டில் சென்னை.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,641-ஆக அதிகரிப்பு !
X

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 1,254 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,641-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 31-ஆயிரத்தை கடந்தது.

தமிழகத்தில் இன்று 1,045 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31,316 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் இன்று ஒரே நாளில் 38 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 704ஆக உயர்ந்துள்ளது.

தமிழதமிழகத்தில் தொடர்ந்து 4ஆவது நாளாக 2 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதன்படி இன்று ஒரேநாளில் 2,396 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன் மூலம் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது 

newstm.in 

Next Story
Share it