53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பாதிப்பு !!

53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பாதிப்பு !!

53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பாதிப்பு !!
X

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்துவிட்டது. பலி எண்ணிக்கையோ 500 - யை கடந்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்காக களத்தில் நின்று உடனுக்கு உடன் செய்திகளை ஊடகங்களும் , பத்திரிக்கையாளர்களும் தந்து வருகின்றனர்.

இந்நிலையில் மும்பையில் பத்திரிகையாளர்கள் 53 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரி உறுதிப்படுத்தி உள்ளார் 53 பத்திரிகையாளர்களில் நிருபர்கள் மற்றும் கேமராமேன்கள் பலர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் மட்டும் 2,700க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருக்கிறது. மாநிலத்தில் 223 பேர் பலியாகி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

Next Story
Share it