இந்தியாவில் 18,000-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு.! தமிழகத்திற்கு 5ஆவது இடம்.!

இந்தியாவில் 18,000-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு.! தமிழகத்திற்கு 5ஆவது இடம்.!

இந்தியாவில் 18,000-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு.! தமிழகத்திற்கு 5ஆவது இடம்.!
X

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,500-ஐ தாண்டியுள்ளது. இந்திய அளவில் பாதிப்பில் தமிழகம் 5ஆவது இடத்தில் உள்ளது.

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது.  ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,601 ஆக  அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,336 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 47 பேர்   உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனாவால் இதுவரை 590  பேர் உயிரிழந்த நிலையில், 3252 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு  திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதுவரை 232 பேர் உயிரிழந்துள்ளனர். 572 பேர் குணமடைந்துள்ளனர். 
அடுத்த   இடத்தில் 2,081 பேருக்கு தொற்று பாதிப்புடன் டெல்லி 2ம் இடத்தில் உள்ளது. 47 பேர் உயிரிழந்துள்ளனர். 431 பேர்  குணமடைந்துள்ளனர்.

தொடர்ந்து 2-வது வாரமாக தமிழகம் இந்த 5-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 1,520 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 17 பேர்   உயிரிழந்துள்ளனர். 457 பேர் குணமடைந்துள்ளனர்.

மாநில வாரியாக விவரம்:

குஜராத்தில் 1939 பேருக்கு பாதிப்பு; 71 பேர் பலி; 131 பேர் குணமடைந்தது.

கோவாவில் 7 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 408 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 291 பேர் குணமடைந்தது.

ராஜஸ்தானில் 1576 பேருக்கு பாதிப்பு; 25 பேர் பலி; 205 பேர் குணமடைந்தது.

மத்தியப்பிரதேசத்தில் 1485 பேருக்கு பாதிப்பு; 74 பேர் பலி; 127 பேர் குணமடைந்தது.

உத்தரப்பிரதேசத்தில் 1184 பேருக்கு பாதிப்பு; 18 பேர் பலி; 140 பேர் குணமடைந்தது.

அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
 

newstm.in 

Next Story
Share it