கணவருக்கு கொரோனா தொற்று.. சோகத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு !

கணவருக்கு கொரோனா தொற்று.. சோகத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு !

கணவருக்கு கொரோனா தொற்று.. சோகத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு !
X

தமிழகத்தில் தீயாக பரவி வரும் கொரோனா தொற்றுக்கு இதுவரை 82,275 பாதிக்கப்பட்டுள்ளனர். 45,500 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாகவும், 1,079 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் சென்னையில் தான் பரிதாபம். 

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் பிரபாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வே துறையில் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ராமபிரபாவதி தனியார் பள்ளி ஒன்று ஆசிரியராக பணியாற்றி வந்தார். இத்தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் பிரபாகருக்கு கொரோனா அறிகுறிகள் இருக்கவே பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு 3 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு நேற்று முன்தினம் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் பிரபாகர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

அவருடைய உடலானது மதுரையிலிருந்து விருதுநகருக்கு எடுத்துச்செல்லப்பட்டது. பிரபாகருக்கு நோய்தொற்று உறுதியானதால், அவருடைய மகள்கள் மற்றும் மனைவிக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டியிருந்தது. மகள்கள் இருவரும் பரிசோதனைக்கு சென்றுவிட ராம பிரபாவதி கணவரை நினைத்து அழுது கொண்டே இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் திடீரென்று வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அப்போது காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in 

Next Story
Share it