1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்தது !! மொத்த பலி எண்ணிக்கை 1385 ஆக உயர்வு !!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்தது !! மொத்த பலி எண்ணிக்கை 1385 ஆக உயர்வு !!


தமிழகத்தில் இன்று 4,329 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 98,392லிருந்து 1,02,721ஆக அதிகரிப்பு. சென்னையில் இன்று 2082பேர் கொரோனாவால் பாதிப்பு.

சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 62,585ல் இருந்து 64,689ஆக உயர்ந்தது. தமிழகத்தில் இன்று கொரோனாவால் 64 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,385ஆக அதிகரிப்பு. இன்று ஒரே நாளில் 2,357 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 58,378ஆக அதிகரிப்பு. செங்கல்பட்டு 330 , திருவள்ளூர் 172 , காஞ்சிபுரம் 121 , மதுரை 287 , கோவை 37 , கடலூர் 20 , தருமபுரி 14 , திண்டுக்கல் 17 , கன்னியாகுமரி 54 , சேலம் 99 ,

ராமநாதபுரம் 73 , ராணிப்பேட்டை 90 , சிவகங்கை 53 , திருவண்ணாமலை 151 , தேனி 126 , நெல்லை 41 , தூத்துக்குடி 27 , என சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newstm.in

Trending News

Latest News

You May Like