10 நாட்களில் இரட்டிப்பான கொரோனா உயிரிழப்பு! அச்சத்தில் மக்கள்!!

10 நாட்களில் இரட்டிப்பான கொரோனா உயிரிழப்பு! அச்சத்தில் மக்கள்!!

10 நாட்களில் இரட்டிப்பான கொரோனா உயிரிழப்பு! அச்சத்தில் மக்கள்!!
X

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 10 நாட்களில் இரு மடங்காக உயர்ந்திருப்பதால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

அமெரிக்காவில் புதிதாக 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த  24 மணி நேரத்தில் ஆயிரத்து 951 பேர் உயிரிழந்ததையடுத்து, கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தை தாண்டியது. இந்த மாதத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 2,000 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கம் காரணமாக அமெரிக்க தொழிலாளர்களில் 6 இல் ஒருவர் வேலை இழந்துவிட்டதாகவும், கடந்த 5 வாரங்களில் இரண்டு கோடியே 60 லட்சம் அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 9 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 

newstm.in

Next Story
Share it