தமிழகத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 1,264ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 1,264ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 1,264ஆக உயர்வு!
X

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றிற்கு மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல், சுமார் 50 பேர் நாள்தோறும் கொரோனாவுக்கு உயிரிழந்து வருகின்றனர். தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 63 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதில், அரசு மருத்துவமனையில் 37 பேரும், தனியார் மருத்துவமனையில் 26 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் 50 வயதிற்குட்பட்ட 5 பேர் மரணமடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 41 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு 1,264 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 929 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இதுவரை 335 பேர் மரணமடைந்துள்ளனர். இணை நோய்கள் இல்லாத 8 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு விகிதம் 1.34 சதவிதமாக உள்ளது.

newstm.in

Next Story
Share it