உள்துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு  !! அதிர்ச்சியில் அதிகாரிகளும் , பாதுகாப்பு காவலர்களும்...

உள்துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு  !! அதிர்ச்சியில் அதிகாரிகளும் , பாதுகாப்பு காவலர்களும்...

உள்துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு  !! அதிர்ச்சியில் அதிகாரிகளும் , பாதுகாப்பு காவலர்களும்...
X

தெலங்கானா மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் 14 ஆயிரத்து 419 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 247 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் ஹைதராபாத்தில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் ஜூலை 15-ம் தேதி வரை மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்துவது குறித்து முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார்.

இந்நிலையில் மாநில உள்துறை அமைச்சர் முகமது மெஹ்மூத் அலி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது மாநில அரசை மேலும் இக்கட்டில் தள்ளியுள்ளது. தற்போது ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் மெஹ்மூத் அலி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சரின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில் ; கடந்த 3 நாட்களுக்கு முன் அமைச்சர் மெஹ்மூத் அலிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அவருக்கு ஸ்வாப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. இந்தப் பரிசோதனையில் அவருக்குக் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அமைச்சருக்குப் பாதுகாப்புக்காகச் சென்ற போலீஸார், உதவியாளர்கள் ஆகியோரைத் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி மருத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், அவர்களுக்குக் கொரோனா பரிசோதனையும் செய்யவும் மருத்துவக் குழு தயாராகி வருகிறது.

Newstm.in

Next Story
Share it