தமிழகத்தில் 2 மாதங்கள் கொரோனா மிக மோசமாக இருக்கும்” : பிரதீப் கவுர் அச்சம்!

 | 

தமிழகத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு கொரோனாவின் தாக்கம் மிக மோசமாக இருக்கும் என மருத்துவர் பிரதீப் கவுர் அச்சம் தெரிவித்துள்ளார்.

கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களாக தீவிரமாக உள்ளது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. முழு முடக்கம் அமல்படுத்தினால் தான் நோயை கட்டுப்படுத்த முடியும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்நிலையில் நோய் தாக்கத்திற்கு ஏற்ப பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

நாளை முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தாக்கம் அடுத்த 2 மாதங்களுக்கு கடுமையாக இருக்கும் என மருத்துவர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தமிழகத்தில் கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் தற்போது கடினமான கட்டத்திற்குள் செல்ல தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த 2 மாதங்களுக்கு கொரோனாவில் இருந்து உங்களையும், உங்கள் குடும்பம் மற்றும் சமூகத்தை காப்பாற்றுவது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டும் என்றும் மக்கள் முகக்கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் இருப்பது ஏமாற்றம் அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP