கொரோனா பாதிப்பு... சென்னை பத்திரிகையாளர் மன்றம் கோரிக்கை!

கொரோனா பாதிப்பு... சென்னை பத்திரிகையாளர் மன்றம் கோரிக்கை!

கொரோனா பாதிப்பு... சென்னை பத்திரிகையாளர் மன்றம் கோரிக்கை!
X

நெருக்கடியான காலக்கட்டத்தில் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்களுக்கு நோய்த்தொற்று கண்டறியும் சிறப்புப் பரிசோதனை முகாமை தமிழக அரசு நடத்த வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சென்னையில் பத்திரிகையாளர்கள் இருவருக்கு நோய்தொற்று கண்டறியப்பட்டதாக வந்திருக்கும் செய்திகள் மிகுந்த கவலை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பத்திரிகையாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியும் சிறப்பு பரிசோதனை முகாமை தமிழக அரசு நடத்த வேண்டும் என்றும், அரசும், அரசியல் கட்சியினரும் நேரடி செய்தியாளர் சந்திப்புகளை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

newstm.in

Next Story
Share it