1. Home
  2. தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு உச்சம்... ஆனாலும் ஆன்லைனில் மது விற்பனை! எங்க போய் முடியுமோ?

கொரோனா பாதிப்பு உச்சம்... ஆனாலும் ஆன்லைனில் மது விற்பனை! எங்க போய் முடியுமோ?


இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிப்பு குறைவாக இருந்த போது ஊரடங்கு பிறப்பித்திருந்த அரசு தற்போது அதிகரிக்கும் போது தளர்வு அளிப்பதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் பாதிப்பு அதிகம். அங்கு தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மும்பையில் நாளை முதல் ஆன்லைன் மூலம் மது விற்பனை தொடங்கப்பட இருக்கிறது. கட்டுப்பாட்டு மண்டலங்கள் தவிர மற்ற இடங்களில் வீடுகளுக்கு மதுபானம் ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடைகளில் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி இல்லை. 


மதுக்கடைகள் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுடன் சேர்ந்து கூட மதுபானங்களை வீடுகளுக்கு விநியோகம் செய்யலாம் என்றும், மாநில அரசு மற்றும் கலால் வரித்துறையினரின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பின்பற்றப்படுவதைச் சம்மந்தப்பட்ட வார்டு அதிகாரிகள், கலால் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

newstm.in

Trending News

Latest News

You May Like