1. Home
  2. தமிழ்நாடு

கொரோனா வைரஸ் பூனையையும் விடல !!

கொரோனா வைரஸ் பூனையையும் விடல !!


கொரோனா வைரஸ் , உலக நாடுகள் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மற்ற நாடுகளை விட அதிக பாதிப்பானது அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக, நியூயார்க் நகரில் பிராங்ஸ் வனவிலங்குகள் பூங்காவில் உள்ள புலி ஒன்றுக்கு, ஏற்பட்ட வறட்டு இருமலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அதற்கு கொரானா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதே போன்று அந்த பூங்காவில் இருந்த 6 புலிகள் மற்றும் சிங்கங்களுக்கும் அறிகுறிகள் காணப்பட்டன. எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் இருந்த நிலையில், கொரானா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பூங்காவின் பணியாளரிடம் இருந்து அந்த விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்க கூடும் என கூறப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது, நியூயார்க் நகரில் இரு வேறு பகுதிகளில் வசித்து வரும் இரு வளர்ப்பு பூனைகளுக்கும் கொரானா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவை இரண்டுக்கும் லேசான அறிகுறிகளே காணப்படுகின்றன. அதனால், குணமடைந்து மீண்டும் பழைய நிலைக்கு அவை திரும்பும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பூனையை வளர்ப்போர் வீட்டில் யாருக்கும் கொரானா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையில், வைரசால் பாதிக்கப்பட்ட வெளிநபார் எவரேனுடனோ ஏற்பட்ட தொடர்பில் இந்த பூனைக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

2வது பூனையின் உரிமையாளருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்பின்பே பூனைக்கு, சுவாச பாதிப்புக்கான அறிகுறிகள் தெரிய வந்தன என அந்த அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஒரு சிலர் அமெரிக்காவில் கொரானா பரவலுக்கு வளர்ப்பு பிராணிகளே காரணம் என குற்றம்சாட்டி வந்தனர்.

ஆனால், அமெரிக்காவின் கொரானா வைரஸ் பரவலில் வளர்ப்பு பிராணிகளுக்கு எந்த பங்கும் இல்லை. அதற்கான சான்றுகளும் இல்லை. அதனால் வளர்ப்பு பிராணிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறப்படுவதில் எந்தவித நியாயமும் இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newstm.in

Trending News

Latest News

You May Like