மரணமடைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரர் மற்றும் மனைவிக்கு கொரோனா பாதிப்பு...

மரணமடைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரர் மற்றும் மனைவிக்கு கொரோனா பாதிப்பு...

மரணமடைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரர் மற்றும் மனைவிக்கு கொரோனா பாதிப்பு...
X

நடிகர் அர்ஜுனின் சகோதரியின் மகன் சிரஞ்சீவி சார்ஜா கடந்த மாதம் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். 39 வயதிலேயே அவர் மரணமடைந்தது சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.

அவரது இறுதி அஞ்சலியில் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொண்டனர். சமீபத்தில் சிரஞ்சீவி சார்ஜாவின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பி துருவா சார்ஜா குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் அவருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இது பற்றி துருவா ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது ; எனக்கும் என் மனைவிக்கும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா டெஸ்டில் பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது. எங்களுக்கு சிறிய அளவிலான அறிகுறிகள் மட்டுமே உள்ளது. அதனால் நாங்களே மருத்துவமனையில் சேர முடிவெடுத்தோம்.

நாங்கள் நலமுடன் திரும்ப வருவோம் என உறுதியுடன் இருக்கிறேன். எங்களுடன் நெருக்கமாக இருந்த அனைவரும் தயவு செய்து நீங்களே சென்று கொரோனா டெஸ்ட் செய்து கொள்ளுங்கள். பாதுகாப்புடன் இருங்கள் என் துருவா குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

Next Story
Share it