1. Home
  2. தமிழ்நாடு

கொரோனா வேணுமா ஜீ.? அலறிய இளைஞர்கள்.. மரண பீதியைக் காட்டிய போலீசார்.! வீடியோ..

கொரோனா வேணுமா ஜீ.? அலறிய இளைஞர்கள்.. மரண பீதியைக் காட்டிய போலீசார்.! வீடியோ..


கொரோனா வேணுமா என்று ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய இளைஞர்களை ஆம்புலன்சில் ஏற்றி மரண பீதியை காண்பித்துள்ளனர் பல்லடம் போலீசார். எங்கள் விடுங்க விடுங்க என இளைஞர்கள் கதறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தெறிக்க விடுகிறது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு நிலை அமலில் உள்ளது. மக்கள் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தியும், மக்கள் அதனை கண்டுகொள்வதில்லை என புகார் உள்ளது.

அதிலும், ஊரடங்கை பின்பற்றாமல் கிரிக்கெட் விளையாடுவது, பைக் ரவுண்ட்ஸ் போவது என இளைஞர்கள் போடும் ஆட்டத்துக்கு அளவே இல்லை. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோரை போலீசார் பிடித்து தோப்புக்கரணம் போட வைத்து, திருக்குறள் எழுத வைப்பது என நூதன முறையில் தண்டனை அளித்துதான் வருகிறார்கள். ஆனால் யாரும் திருந்தியப்பாடு இல்லை.
இதற்கிடையே திருப்பூர் போலீஸார் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
 
திருப்பூரில் ஊரடங்கு நிலை அமலில் உள்ள நிலையில், தேவையில்லாமல், 5 இளைஞர்கள் 2 வண்டிகளில் வீதிகளில் வலம் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் முக கவசம் அணியாத நிலையில், ஒரு இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அவர்களிடம் ஏன் தேவையில்லாமல், வெளியே சுற்றிக்கொண்டிருக்கிறீர்கள் என்று விசாரணை நடத்துகின்றனர்.

பின், அவர்களை அங்கு நிறுத்த வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்சில் ஏற்றுகின்றனர். அவர்கள் ஆம்புலன்சில் ஏற மறுப்பு தெரிவிப்பதும், அதற்கு போலீசார் அவர்கள் குண்டுக்கட்டாக ஆம்புலன்சிற்குள் ஏற்றுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

அப்போது உள்ளே இருந்த நபர் தனக்கு கொரோனா இருப்பதாகவும், 'கொரோன வேணுமா ஜி' என அவர்களை கட்டியணைக்க செல்கிறார். அலறிய அவர்கள் ஜன்னல் வழியாக வெளியே தப்பிப்பதும், அவர்களை போலீசார் மீண்டும் உள்ளே தள்ளுவது போன்று வீடியோ உள்ளது. 

இந்த வீடியோ பார்ப்பவர்களை சிரிக்க வைக்கிறது. அய்யோ காப்பாத்துங்கனு அந்த இளைஞர்கள் கதறுவதுமாக அந்த வீடியோ உள்ளது. இந்த வீடியோ, ச மூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

newstm.in 

Trending News

Latest News

You May Like