சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனா.. அதிர்ச்சியில் போலீசார் !

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனா.. அதிர்ச்சியில் போலீசார் !

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனா.. அதிர்ச்சியில் போலீசார் !
X

தமிழகத்தில் சென்னையில் மட்டும் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு, தற்போது பிற மாவட்டங்களிலும் உயர்ந்து வருகிறது.

இதனால் மக்கள் கொரோனா குறித்த அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியில் இருக்கும் முன்கள பணியாளர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. 

மருத்துவர்கள், செவிலியர், காவல்துறையினர், சுகாதார பணியாளர்களுக்கும் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. 

இந்நிலையில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித்நாதன் ராஜகோபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 3 நாட்களில் மட்டும் 250 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
இந்நிலையில், சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட எஸ்.பி ரோஹித்நாதனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

,இதனையடுத்து அவருடன் பணியில் இருந்த போலீசாரும் தனிமைப்படுத்திக்கொண்டனர். 

newstm.in 

Next Story
Share it