ஊழியர்களுக்கு கொரோனா... தனிமைப்படுத்திக் கொண்ட முதலமைச்சர்!

ஊழியர்களுக்கு கொரோனா... தனிமைப்படுத்திக் கொண்ட முதலமைச்சர்!

ஊழியர்களுக்கு கொரோனா... தனிமைப்படுத்திக் கொண்ட முதலமைச்சர்!
X

அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா கடந்த நாட்களில் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், எடியூரப்பாவின் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் 5 நாட்களுக்கு வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கர்நாடக மாநில முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேலும், வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து பணிகள் மேற்கொள்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it