மாஸ்க் அணியாத பிரேசில் அதிபருக்கு கொரோனா!

மாஸ்க் அணியாத பிரேசில் அதிபருக்கு கொரோனா!

மாஸ்க் அணியாத பிரேசில் அதிபருக்கு கொரோனா!
X

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தி வருகிற நிலையில், முகக் கவசம் வேண்டாம், சுதந்திரமாக நடமாடுங்கள் என்று பிரசாரம் செய்து வந்தார் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரே. தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆரம்ப  அறிகுறிகளுடன் இருப்பதால்  வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி அலுவலக பணிகளை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக செய்து வருகிறார்.

இந்நிலையில், பேஸ்புக் மூலம் மக்களிடையே நேரலையில் பேசிய அதிபர், தனக்கு கடந்த வார இறுதியில் உடல்நிலை பாதிக்கப்பட்டதில் இருந்தே, தினமும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை சாப்பிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

'தற்போது உடல் நிலை சீரடடையத் தொடங்கி இருக்கிறது.  கடவுளுக்கு நன்றி. மலேரியா மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின், பல்வேறு நாடுகளில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.  

newstm.in

Next Story
Share it