ஒரே பிரசவத்தில் பிறந்த 4 சகோதரிகளின் திருமணத்தை நிறுத்திய கொரோனா!

ஒரே பிரசவத்தில் பிறந்த 4 சகோதரிகளின் திருமணத்தை நிறுத்திய கொரோனா!

ஒரே பிரசவத்தில் பிறந்த 4 சகோதரிகளின் திருமணத்தை நிறுத்திய கொரோனா!
X

கேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பெண்களின் திருமணம் கொரோனா ஊரடங்கால் தடைபட்டது.

திருவனந்தபுரம் அருகே போத்தன்கோட்டைச் சேர்ந்த பிரேம்குமார் - ரமாதேவி தம்பதிக்கு 1995ஆம் ஆண்டு ஒரே பிரசவத்தில், நான்கு பெண்கள், ஒரு ஆண் என ஐந்து குழந்தைகள் பிறந்தன. ஐந்து குழந்தைகளையும் வளர்க்க முடியாமல், பிரேம்குமார் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய் ரமாதேவி, பல சிரமங்களுக்கு இடையில் ஐந்து பேரையும் வளர்த்தார். இந்நிலையில் நான்கு பெண்களுக்கும்  குருவாயூர் கோவிலில் திருமணம் நடப்பதாக முடிவுசெய்யப்பட்டிருந்தது.

ஒரு மாப்பிள்ளை மஸ்கட்டிலும், மற்றொருவர் குவைத்திலும் பணியாற்றிவருகின்றனர். ஊரடங்கு காரணமாக அவர்களால் ஊர் திரும்ப முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் ஊரடங்கு நேரத்தில் திருமணம் நடத்துவதிலும் பல சிரமங்கள் இருக்கிறது. இதைத் தொடர்ந்து திருமணம் ஜூலை மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

newstm.in

Next Story
Share it