கொரோனா நிவாரணமாக ரூ.980 கோடி நிதி திரட்டிய பாடகி!

கொரோனா நிவாரணமாக ரூ.980 கோடி நிதி திரட்டிய பாடகி!

கொரோனா நிவாரணமாக ரூ.980 கோடி நிதி திரட்டிய பாடகி!
X

கொரோனா நிவாரணத்துக்கு நடத்தப்பட்ட இணைய இசை நிகழ்ச்சியில் பாப் பாடகி லேடி காகா ரூ. 980 கோடி திரட்டியுள்ளார்.

ஒன் வேர்ல்ட்: டுகெதர் அட் ஹோம் என்கிற பெயரில் லேடி காகாவும் உலக சுகாதார அமைப்பும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா போன்ற இந்தியப் பிரபலங்களும் இதில் பங்கேற்றார்கள். காகா, ஸ்டீவி வொண்டர், பால் மெக்கார்ட்னி, எல்டன் ஜான் போன்றோர் வீட்டிலிருந்தபடியே இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். நல்ல நோக்கத்துக்காக நடத்தப்படும் இசை நிகழ்ச்சி என்பதால் ரசிகர்களும் நிறுவனங்களும் ஏராளமான நிதியுதவிகளை வழங்கினார்கள். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவத் துறையினரின் நலனுக்காக ரூ.980 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது.

newstm.in

Next Story
Share it