1. Home
  2. தமிழ்நாடு

டிஸ்சார்ஜ் ஆன சில மணி நேரங்களுக்குள் மீண்டும் கொரோனா பாசிட்டிவ்!

டிஸ்சார்ஜ் ஆன சில மணி நேரங்களுக்குள் மீண்டும் கொரோனா பாசிட்டிவ்!


கொரோனா தொற்று கண்டறியப்பட்ட சிலருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்து டிஸ்சார்ஜ் ஆனபின்பு மீண்டும் பாசிட்டிவ் என வந்ததால் மருத்துவமனைக்கு திரும்ப அழைக்கப்பட்டனர்.

ஜம்மு மாநிலத்தில் குளிர்பான ஆலை ஒன்றில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் 15 பேருக்கு கடந்த ஜூலை ஒன்றாம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஜூலை 17 அன்று 15 பேரின் மாதிரிகளை பரிசோதித்ததில் முடிவு நெகடிவ் என வந்தன. அதே நாளில், சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களது மாதிரிகளை மீண்டும் இரண்டாவது சோதனைக்கு எடுத்துக் கொண்டனர். ஆனால் பரிசோதனை முடிவு வருவதற்கு முன்பு, மருத்துவ நிர்வாகம் அவர்கள் அனைவரையும் டிஸ்சார்ஜ் செய்து அனுப்பி விட்டனர். ஜூன் 17 அன்று மாலை பரிசோதனை முடிவு வந்தபோது, 15 தொழிலாளர்களில் 12 பேருக்கு பாசிட்டிவ் என இருந்ததால் மருத்துவ பணியாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.


இதையடுத்து 12 பேரையும் தொடர்புகொண்ட சுகாதாரத்துறையினர் பாசிட்டிவ் வந்த விஷயத்தை சொல்லாமல் எக்ஸ்ரே ஒன்று எடுக்க வேண்டும் என்றுகூறி மருத்துவமனைக்கு வரவழைத்து, அதன் பின்னரே பரிசோதனை முடிவுகளை காண்பித்துள்ளனர். தற்போது 12 பேரும் மருத்துவமனையில் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.    

newstm.in

Trending News

Latest News

You May Like