கொரோனா அதிகரிப்பு !! சென்னை முழு முடக்கமா ? சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் !!

கொரோனா அதிகரிப்பு !! சென்னை முழு முடக்கமா ? சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் !!

கொரோனா அதிகரிப்பு !! சென்னை முழு முடக்கமா ? சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் !!
X

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டுமே அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதால் , சென்னையின் மொத்த பாதிப்பு 24,545 ஆக உயர்ந்துள்ளது. இது தவிர பிற மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகம் உள்ளது.

இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழுமுடக்கம் அமல்படுத்தப்பட போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் முழு முடக்கம் அமலுக்கு வர போவதாக வெளியான தகவல் குறித்து சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு முடக்கம் அறிவிக்கப்படுவதாக வெளியான தகவல்கள் வதந்தியே மற்றுமே. அப்படி எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்று கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்

Newstm.in

Next Story
Share it