1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டியது !! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2167ஆக உயர்வு..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டியது !! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2167ஆக உயர்வு..


தமிழகத்தில் இன்று 4,496 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 1,47,324லிருந்து 1,51,820ஆக அதிகரிப்பு. சென்னையில் இன்று 1,291பேர் கொரோனாவால் பாதிப்பு.

சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 79,698ல் இருந்து 80,961ஆக உயர்ந்தது. தமிழகத்தில் இன்று கொரோனாவால் 68 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2167ஆக அதிகரிப்பு.

இன்று ஒரே நாளில் 5,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குகுணமடைந்தோர் எண்ணிக்கை 1,02,310ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newstm.in

Trending News

Latest News

You May Like