எங்கள் மாநிலத்தில் 80% பேரை அறிகுறியே இல்லாமல் கொரோனா தாக்கியுள்ளது.! உத்தவ் தாக்கரே அதிர்ச்சி..!

எங்கள் மாநிலத்தில் 80% பேரை அறிகுறியே இல்லாமல் கொரோனா தாக்கியுள்ளது.! உத்தவ் தாக்கரே அதிர்ச்சி..!

எங்கள் மாநிலத்தில் 80% பேரை அறிகுறியே இல்லாமல் கொரோனா தாக்கியுள்ளது.! உத்தவ் தாக்கரே அதிர்ச்சி..!
X

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் இங்கு கொரோனா அசுர வேகத்தில் பரவி, நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. ஏறக்குறைய இங்கு கொரோனா சமூக பரவல் நிலையை எட்டிவிட்டது தகவல் கூறப்படுகிறது.

அந்த அளவுக்கு மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மகாராஷ்டிராவில் மட்டும்  7,628பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்களில் 80 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றார்.

இந்த மாநிலத்தில் தற்போதைக்கு 7,628 நோயாளிகள் உள்ளனர். இது நாட்டிலேயே அதிக எண்ணிக்கையாகும். இவர்களில் ஒரு பகுதியினர் மும்பையைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார். 

 அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்கள் எங்களுக்கு மிகவும் முக்கியமானவை என உத்தவ் தாக்கரே தெரிவித்தார். 

மேலும், மே  30 ஆம் தேதிக்கு பிறகு, எவற்றுக்கெல்லாம் அனுமதி அளிக்கப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிப்போம்.  இந்த வைரசை முற்றிலுமாக நாம் அழிக்க வேண்டும் என்றார். 

Next Story
Share it