1. Home
  2. தமிழ்நாடு

ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவலருக்கு கொரோனா..! - கலக்கத்தில் சக காவலர்கள்..

ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவலருக்கு கொரோனா..! - கலக்கத்தில் சக காவலர்கள்..


கோவையில் 40 வயது பெண் காவலருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் சக போலீசார் கலக்கம் அடைந்துள்ளனர்.

நாள்தோறும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் பாதிக்கப்பட்டவர்களின் இருப்பிடம் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 
 
அந்த வகையில் தமிழகத்தில் நேற்று புதிதாக 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் சென்னையில் மட்டும் புதிதாக 55 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அத்துடன் மட்டும் தென்காசியில் 5 பேருக்கும், செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூரில் தலா 3 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
 
ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவலருக்கு கொரோனா..! - கலக்கத்தில் சக காவலர்கள்..

இந்நிலையில், கோவையில் 40 வயது பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதியாகியுள்ளது. கோவை அன்னூர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் இவர், அன்னூர்-அவினாசி சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். சீல் வைக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்ட போது, தொற்று ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  
ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவலருக்கு கொரோனா..! - கலக்கத்தில் சக காவலர்கள்..

மேட்டுப்பாளையம், அன்னூர், மதுக்கரை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, துடியலூர் ஆகிய சில்வைக்கப்பட்ட பகுதிகளில் பணிபுரியும் காவலர்கள் மொத்தம் 344 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனையடுத்து அவருடன் கண்காணிப்பு பணியில் இருந்த போலீசாருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

newstm.in 

Trending News

Latest News

You May Like