இந்தியாவில் மேலும் 41,383 பேருக்கு கொரோனா!!

 | 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 507 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 41,383  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே நாளில் 38,652 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் 4,09,394 பேர் நோய் தொற்றால் பாதிப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது சிகிச்சையில் இருப்போர் விகிதம் 1.3ஆக உள்ளது.

corona 1

இந்தியாவில் இதுவரை 3,04,29,339 பேர் குணமடைந்துள்ளனர். அதாவது 97 சதவீதம் பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை புள்ளிவிவரம் மூலம் தெரியவருகிறது.


இந்தியாவில் இதுவரை 4,18,987 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு விகிதம் 1.33ஆக உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 41,78,51,151  டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  இதுவரை 3,12,57,720 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 17,18,439 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இதுவரை 45,09,11,712 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.


newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP