30 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா! அதிர்ச்சியில் ஊடகங்கள்!!

30 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா! அதிர்ச்சியில் ஊடகங்கள்!!

30 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா! அதிர்ச்சியில் ஊடகங்கள்!!
X

மஹாராஷ்ட்டிராவில் பத்திரிகையாளர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பை மாநகராட்சி சார்பில் மும்பை பத்திரிகையாளர் மன்றம் அருகே மருத்துவ பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டது. அப்போது  171 பேருக்கு கடந்த ஏப்.16, 17 இல் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 30 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலருக்கு பரிசோதனை முடிவு வர வேண்டியுள்ளது. கொரோனா அறிகுறி இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனாவில் பாதித்தவர்கள் பலரும் நாளிதழ் நிருபர்கள், கேமராமேன்கள், டிவி., மற்றும் எலக்ட்ரானிக் மீடியாக்களை சேர்ந்தவர்கள்.

newstm.in

Next Story
Share it