ஓபிஎஸ் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 3 காவலர்களுக்கு கொரோனா!

ஓபிஎஸ் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 3 காவலர்களுக்கு கொரோனா!

ஓபிஎஸ் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 3 காவலர்களுக்கு கொரோனா!
X

சென்னையில் துணை முதல்வா் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 3 காவலா்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலா்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதன் முடிவு நேற்று வெளியானது. இதில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 3 ஆயுதப்படை காவலா்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 3 காவலா்களும், கிண்டி ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். சென்னை காவல்துறையில் கொரோனா பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டுவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

Next Story
Share it