கொரோனா உயிரிழப்பு !! அனைத்து குடும்பங்களூக்கும் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் !! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

X

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,420ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்று காரணமாக புதுச்சேரியில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின்  அனைத்து குடும்பத்திற்கும் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா நிவாரண நிதியாக பொதுநிவாரண நிதிக்கு ரூ.9.16 கோடி வந்துள்ளதாகவும் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். மேலும் கொரோனா தொற்றால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள இல்லங்கள் அனைத்துக்கும் 700 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என்றும் முதல மைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

Newstm.in

Next Story
Share it