கொரோனா எதிரொலி !! நேரடி வழக்கு விசாரணை கிடையாது !! உச்சநீதிமன்றம்

கொரோனா எதிரொலி !! நேரடி வழக்கு விசாரணை கிடையாது !! உச்சநீதிமன்றம்

கொரோனா எதிரொலி !! நேரடி வழக்கு விசாரணை கிடையாது !! உச்சநீதிமன்றம்
X

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாள் தோறும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும் இதன் பாதிப்பு தற்போதைக்கு குறைந்த மாதிரி தெரியவில்லை.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை தற்போதைக்கு நடைபெறாது என நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எஃப்.நரிமன் உள்ளிட்டோர் அடங்கிய ஏழு நீதிபதிகள் கொண்ட குழு தெரிவித்துள்ளது

மேலும் நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான குழு ஜூன் 30ம் தேதி கூடி முடிவெடுக்கும் வரை கடந்த மார்ச் 24 முதல் தொடங்கி நடைபெற்று வரும் காணொலி விசாரணை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் நேரடி விசாரணை நடத்துவது குறித்து முடிவெடுக்க நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான குழுவில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ஆர்.எஃப்.நரிமன், யு.யு.லலித், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்

Newstm.in

Next Story
Share it