கொரோனா மரணம் !! ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்..

கொரோனா மரணம் !! ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்..

கொரோனா மரணம் !! ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்..
X

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் 444 மரணங்கள் கொரோனா பலி எண்ணிக்கையில் சேர்க்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.

இதன்மூலம், தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்தது. இதையடுத்து அரசு கொரோனாவால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டுவதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் சென்னை சிந்தாதிரிபேட்டையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது ; கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் , ராயபுரம் மண்டலம் விரைவில் பூஜ்யம் என்ற நிலையை அடையும். கொரோனா மரணங்களை மறைக்க வேண்டிய அவசியம் , அரசுக்கு கிடையாது. கொரோனா மரணங்களை மறைப்பதன் மூலம் அரசுக்கு என்ன ஆதாயம் இருக்கிறது ? என கேள்வி எழுப்பினார்.

Newstm.in

Next Story
Share it