கொரோனா பாதிப்பு ஏற்பட்டு , தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் பலி !! தலைவர்கள் இரங்கல்...

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு , தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் பலி !! தலைவர்கள் இரங்கல்...

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு , தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் பலி !! தலைவர்கள் இரங்கல்...
X

கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட ராஜ் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் , கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு உயிரிழந்தார்.

அவருக்கு ஷண்முக சுந்தரி என்ற மனைவியும் , ஜீவா (13) என்ற மகனும் உள்ளனர். அவரது மனைவி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் ஆவடி திருமுல்லைவாயலில் வசித்து வருகிறார்கள்.

முதலில் தமிழன் டி.வி., பிறகு மக்கள் தொலைக்காட்சியில் பணிபுரிந்த வேல்முருகன், பின்னர் ராஜ் டிவியில் இணைந்து கடந்த 10 ஆண்டுகளாக மூத்த ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் உயிரிழந்த ராஜ் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகனுக்கு சுகாதாரத்துறை செயலாளர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில், ராஜ் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனாவால் இறந்தது வேதனை தருகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது இரங்கல் செய்தியில், மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனா தொற்றால் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழந்த இரங்கலையும் ,

ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன். முன்கள வீரர்களாகப் பணியாற்றும் ஊடகத்துறையினர் தங்களின் பாதுகாப்பிலும் கவனம் கொள்ள வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Newstm.in

Next Story
Share it