1. Home
  2. தமிழ்நாடு

கோவை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா பாதிப்பு !! தனியார் மருத்துவமனையில் அனுமதி..

கோவை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா பாதிப்பு !! தனியார் மருத்துவமனையில் அனுமதி..


கோவை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரம் முதல் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் போர்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் கோவை மாவட்ட ஆட்சியராக உள்ள ராசாமணியின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் இருந்து வருகிறது. தினமும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனை, கட்டுப்பாட்டு மண்டலங்களை நேரில் சென்று பார்வையிடுதல் , கொரோனா வைரசை கட்டுப்பட்டு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மதிக்காதவர்கள் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டு வந்தார்.

இந்த சூழலில், மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newstm.in

Trending News

Latest News

You May Like