கொரோனா பாதிப்பு !! முதல் முறையாக,...சென்னையில் குறைய ஆரம்பித்துள்ளது !! அமைச்சர் விளக்கம்...

கொரோனா பாதிப்பு !! முதல் முறையாக,...சென்னையில் குறைய ஆரம்பித்துள்ளது !! அமைச்சர் விளக்கம்...

கொரோனா பாதிப்பு !! முதல் முறையாக,...சென்னையில் குறைய ஆரம்பித்துள்ளது !! அமைச்சர் விளக்கம்...
X

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 2,721 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் சென்னையில் மேலும் 2,082 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 64,689 ஆக அதிகரித்தது.

மேலும், மொத்த பாதிப்பில் சென்னையில் மட்டுமே 63.31% பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஆவடியில் கொரோனா தடுப்பு நோய் சிறப்பு மருத்துவ முகாம்களை அமைச்சர் பாண்டியராஜன் பார்வையிட்டார்.

அதன் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் ; சென்னையில் நேற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை விட குணமடைந்தோர் எண்ணிக்கை 91 கூடுதலாக இருப்பதாகவும் முதல் முறையாக அதிகமான கொரோனா நோயாளிகள் குணமடைந்து இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் , இதனை Flattening the curve என அழைப்பார்கள் என்றும் சென்னையில் பாதிப்பு குறையத் தொடங்கியதாகவும் கூறினார்.

Newstm.in

Next Story
Share it