கொரோனா ஊரடங்கு !! பேரன் , பேத்திகளை பார்க்க முடியல !! வயதான தம்பதிகள் எடுத்த விபரீத முடிவு..

கொரோனா ஊரடங்கு !! பேரன் , பேத்திகளை பார்க்க முடியல !! வயதான தம்பதிகள் எடுத்த விபரீத முடிவு..

கொரோனா ஊரடங்கு !! பேரன் , பேத்திகளை பார்க்க முடியல !! வயதான தம்பதிகள் எடுத்த விபரீத முடிவு..
X

நாகை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்த மீன்வியாபாரி அருள்சாமி-70 அவரது மனைவி பாக்கியவதி-65 தம்பதியினர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏன்படுத்தியுள்ளது.

இவர்களது இரண்டு மகன்கள் திருமணமாகி சென்னையிலும் ஒரு மகள் திருமணமாகி வெளியூரிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கடந்த மூன்று மாதங்களாக பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகளை சென்று பார்க்க முடியாமலும் அவர்களும் வந்து செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனால் தனிமையில் வாழ்ந்த வயதான தம்பதியினர் மன உளைச்சலில் விரக்தியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தகவல் அறிந்த திருவெண்காடு போலிசார் தம்பதியர் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமணைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தாய்தந்தை இறந்ததை அறிந்து வந்த மகன்களையும் அவர்களது குடும்பத்தாரையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி அதே மருத்துவமனையில் தனிமைபடுத்தினர்.இதனால் இறந்தவர்களை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சசோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in

Next Story
Share it