சுகாதாரத்துறை செயலாளர் குடும்பத்தில் மனைவி, மகன் உள்பட 4 பேருக்கு கொரோனா உறுதி !

சுகாதாரத்துறை செயலாளர் குடும்பத்தில் மனைவி, மகன் உள்பட 4 பேருக்கு கொரோனா உறுதி !

சுகாதாரத்துறை செயலாளர் குடும்பத்தில் மனைவி, மகன் உள்பட 4 பேருக்கு கொரோனா உறுதி !
X

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. அதனை தடுக்கும் பணியில் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பு பணிகளில் மும்முரமாக பணியாற்றி வருகிறார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக செல்வதால் வீட்டிற்கு போகாமல் அரசினர் விடுதியில் தங்கியுள்ளார்.

இந்த சூழலில் அவரது மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் மதுரையில் இருந்து சென்னை வந்துள்ளனர். முறைப்படி அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த சுகாதாரத்துதறை செயலர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகனுக்கு பரிசோதனை நடந்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் நால்வரும் சென்னை கிங்ஸ் ஆய்வு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செயலர் ராதாகிருஷ்ணனுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.  

newstm.in 

Next Story
Share it