1. Home
  2. தமிழ்நாடு

"முகக்கவசத்தை தொட்டாலே கொரோனா வரும்" : எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்!

"முகக்கவசத்தை தொட்டாலே கொரோனா வரும்" : எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்!


கொரோனாவை தடுப்பதற்கான முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றான மாஸ்க்கை பலரும் முறையாக அணிவதில்லை என்றும், மாஸ்க்கை தொட்டால்கூட கொரோனா ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கொரோனா பாசிட்டிவ், நெகட்டிவ், அறிகுறிகள் உள்ளவர்கள், அறிகுறிகள் இல்லாதவர்கள் என யாராக இருந்தாலும் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிவது பாதுகாப்பானது. மாஸ்க் அணிந்திருந்தால்கூட 6 அடி தூரத்தில் நின்றுதான் பேசிக்கொள்ளவேண்டும். மாஸ்க் அணிந்திருக்கிறோமே என்று அருகில் சென்று பேசக்கூடாது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மெடிக்கல் ஷாப்புகளில் விற்கப்படும் சர்ஜிகல் மாஸ்க்தான் அணியவேண்டும். துணி மாஸ்க் அணியக்கூடாது. 8 மணிநேரத்துக்கு ஒருமுறை மாஸ்க்கை கட்டாயம் கழட்டி பாதுகாப்பாக அப்புறப்படுத்தவேண்டும்.


கொரோனா இல்லாதவர்கள் மாஸ்க்கை கழட்டும்போது மாஸ்க்கிலுள்ள ரப்பர் நூலை பிடித்துதான் கழட்டி குப்பையில் வீசவேண்டுமே தவிர மாஸ்க்கை கையால் தொடவேக்கூடாது. மாஸ்க்கின் முன் பக்கமும் பின்பக்கமும் தொடவேக்கூடாது. காதில் மாட்டப்பட்டிருக்கும் மாஸ்க்கிலுள்ள ரப்பர் நூலை வைத்துதான் அட்ஜஸ்ட் செய்யவேண்டும். காரணம், மாஸ்க்கில் கொரோனா கிரிமி தொற்றியிருந்தால் அது கையில் பட்டு நமக்கோ அல்லது மற்றவருக்கோ பரவலாம். அதேபோல், கொரோனா தொற்று ஏற்பட்டு அறிகுறிகள்; பாதிப்புகள் வெளியே தெரியாத ஏ-சிம்டமேட்டிக் நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டால் அந்த வீட்டிலுள்ள அனைவரும் சர்ஜிகல் மாஸ்க் அணிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள், அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இன்னும் பாதுகாப்பாக விலகி இருக்கவேண்டும்.

பல ஆண்கள் துண்டையும் பெண்கள் துப்பட்டாவையும் மாஸ்க்குபோல் வெளியிடங்களில் கட்டிக்கொள்கிறார்கள். அப்படி அணிபவர்கள் வீட்டிற்கு வந்ததும் கழட்டி வைத்துவிட்டு மீண்டும் வழக்கமான பணிகளில் ஈடுபட ஆரம்பித்துவிடுகிறார்கள். அதிலும், கோரோனா தொற்றியிருக்கும் என்பதால், அப்படியே வைத்துவிடக்கூடாது. வெளியில் சென்று வந்தவுடன் அந்தத் துணியை நன்கு துவைத்து காயவைத்துதான் பயன்படுத்த வேண்டும் என கூறுகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like