5,00,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு... பொதுமக்கள் அதிர்ச்சி!

 | 

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து கடந்துள்ளது. 24,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா பாதிப்பு உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரி்த்து வருகிறது. சீனா இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டாலும் கூட ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் கொரோனாவின் பிடியில் சிக்கித்தவிக்கின்றன. இத்தாலியில் 80,589 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,215 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 712 பேர் பலியாகியுள்ளனர். புதிதாக 6,200 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினில் புதிதாக 8,721 பேருக்கு கொரோனா வைலஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக  57,786 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 4,365 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 718 பேர் பலியாகி இருக்கின்றனர்.

தற்போது அமெரிக்காவில் நோய் பரவல் மிக வேகமாக இருக்கிறது. மொத்தமாக 85,268 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,057 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 1,293 பேரும் 24 மணி நேரத்தில் 266 பேரும் பலியாகி இருக்கின்றனர்.        

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP