ஒரே நாளில் 2,000 பேரை காவு வாங்கிய கொரோனா!

 | 

கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் ஒரே நாளில் 2000 பேர் உயிரிழந்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்று 22 ஆயிரம் பேர் உயிரிழந்திருந்த நிலையில், தற்போது உயிரிழப்பு 24 ஆயிரத்தை கடந்துள்ளது. அதிகபட்சமாக இத்தாலியில் மொத்தம் 8,215 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் 4,365 பேர் பலியாகி உள்ளனர். மூன்றாவதாக சீனாவில் உயிரிழப்பு 3,292ஆக உள்ளது. அதற்கு அடுத்ததாக ஈரானில் 2,234 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 


மொத்த பாதிப்பு பொறுத்தவரையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 85,594 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு உயிரிழப்பு 1,300ஆக உள்ளது. இரண்டாவதாக சீனாவில் 81,340 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவதாக இத்தாலியில்      80,589 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஸ்பெயினில் 57,786 பேரும், ஜெர்மனியில் 43,938 பேரும் கொரோனாவால் அவதிப்பட்டு வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP