1. Home
  2. தமிழ்நாடு

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனையில் தோல்வி !! அதிர்ச்சியில் உலக சுகாதார மையம்

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனையில் தோல்வி !! அதிர்ச்சியில் உலக சுகாதார மையம்


உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா , நாடு முழுவதும் பரவி பெறும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க உலக நாடுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இன்று வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசியும் இல்லை.

உலகின் பல்வேறு மருந்து கம்பெனிகள் சோதனையில் இறங்கி உள்ளன. அந்த வகையில் பல்வேறு ஆய்வு பரிசோதனைள் காரணமாக கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தாக ரெமெடிவிர் மருந்தை சிகிச்சையளிக்க பயன்படுத்த முடியும் என்ற பரவலாக பேசப்பட்டு வந்தது.

ஆனால் சீனாவில் நடத்தப்பட்ட கிளினிக்கல் சோதனை குறித்து உலக சுகாதார அமைப்பு தற்செயலாக வெளியிட்ட வரைவு ஆவணங்களின்படி, மருந்து வெற்றிகரமாக இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த மருந்து நோயாளிகளின் நிலையை மேம்படுத்தவில்லை என்றும் இரத்த ஓட்டத்தில் நோய்க்கிருமிகளின் இருப்பைக் குறைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த மருந்தை தயாரித்து வரும் அமெரிக்க நிறுவனமான கிலியட் சயின்சஸ், இந்த ஆவணம் ஆய்வை தவறாக சித்தரித்துள்ளது என்று குற்றம்சாட்டி உள்ளது. முன்னதாக உலக சுகாதார அமைப்பு (WHO) அதன் மருத்துவ பரிசோதனை தரவுத்தளத்தில் தற்செயலாக remdesivir மருந்தினை பயன்படுத்தி நடத்தப்பட்ட சோதனைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் remdesivir மருந்து தோல்வி அடைந்து விட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த செய்திகள் வேகமாக பரவிய நிலையில் , தோல்வியுற்ற சோதனை பற்றி வரைவு அறிக்கை தவறுதலாக பதிவேற்றப்பட்டதை உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியதுடன் அதனை உடனே நீக்கிவிட்டது. இதற்கிடையே remdesivir மருந்தினை ஆராய்ச்சியாளர்கள் 237 நோயாளிகளுக்கு கொடுத்து ஆய்வு செய்திருக்கிறார்கள். மருந்து 158 பேருக்கு சரியாக வேலை செய்யவில்லை. 79 பேருக்கு முன்னேற்றத்தை தந்துள்ளது.

இந்நிலையில் ஒரு மாதத்திற்குப் பிறகு, மருந்து உட்கொண்ட நோயாளிகளில் 13.9% பேர் இறந்துவிட்டனர். பக்க விளைவுகள் அதிகம் இருந்த காரணத்தால் இந்த சோதனை ஆரம்பத்திலேயே நிறுத்தப்பட்டது.

ரெம்டெசிவிர் மருத்துவ வைராலஜிக்கல் நன்மைகளுடன் தொடர்புபடுத்தப்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தற்செயலாக வெளியிட்ட வரைவு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

Newstm.in

Trending News

Latest News

You May Like