சர்ச்சைக்குரிய கருத்து... பிக் பாஸ் பிரபலம் கைது!

சர்ச்சைக்குரிய கருத்து... பிக் பாஸ் பிரபலம் கைது!

சர்ச்சைக்குரிய கருத்து... பிக் பாஸ் பிரபலம் கைது!
X

சமூகத்தில் பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக நடிகரும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான அஜாஸ் கான் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அஜாஸ் கான், பேஸ்புக்கில் லைவ் செய்தார். அப்போது அவர் ஆட்சேபனைக்குரிய வகையில், அதாவது சமூகத்தில் பிரச்னை ஏற்படும் வகையில் பேசியதாக தெரிகிறது. இதனையடுத்து மும்பை காவல்துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். 

 153ஏ பிரிவின் கீழ் சமூகங்களிடையே பகைமையை வளர்த்ததற்காக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம், சமூக பிரச்னை ஏற்படும் வகையில் வீடியோ வெளியிட்ட குற்றத்திற்காவும், கடந்த அக்., 2018ல் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it