தொடரும் சோகம்.. கொரோனா தடுப்பு பணியில் இருந்த எஸ்.ஐ அதே தொற்றால் உயிரிழப்பு !

 | 

சென்னையில் கொரோனா பாதிப்பிற்கு மேலும் ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்துள்ளது சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கும் முன்களபணியில் இருக்கும் மருத்துவர்கள், போலீசார், தூய்மை பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் மணிமாறன்(57). 

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட இவருக்கு கடந்த 11ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. அறிகுறிகள் இருந்ததால் சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் அவர் உயிரிழந்தார்.

ஏற்கெனவே சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய பாலமுரளி கொரோனா காரணமாக இறந்த நிலையில் சென்னை காவல் துறையில் இரண்டாவது இறப்பு சம்பவம் நடந்துள்ளது.

சென்னை காவல்துறையில் இதுவரை 1155 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 462 போலீசார் பூரண குணமடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP