சம்பள விஷயத்தில் தல அஜித்தை ஃபாலோ பண்ண தளபதி முடிவு!

சம்பள விஷயத்தில் தல அஜித்தை ஃபாலோ பண்ண தளபதி முடிவு!

சம்பள விஷயத்தில் தல அஜித்தை ஃபாலோ பண்ண தளபதி முடிவு!
X

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோக்களில் ரஜினிக்கு அடுத்து விஜய் தான் உள்ளார். கடைசியாக தர்பார் படத்தில் ரஜினிகாந்த் 104 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் தளபதி 65 படத்திற்காக விஜய் 100 கோடி சம்பளம் பேசி உள்ளார்.

ஆனால் கொரோனா அனைவரின் பொருளாதாரத்தையும் புரட்டிப்போட்டுள்ளதால் நடிகர்கள் சம்பளத்தில் பாதியை குறைத்துக் கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அண்ணாத்த படத்திற்காக ரஜினி தனது சம்பளத்தில் ஒரு பகுதியை விட்டுக்கொடுத்துள்ளார்.     இதனையடுத்து தளபதி 65 படத்திற்கு சம்பளத்தை குறைக்க சொல்லி சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய்யிடம் தொடர்ந்து கூறியுள்ளது. ஆகவே, இனி சம்பள விஷயத்திலும், தயாரிப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் விஷயத்திலும் தல அஜித்தை பின்பற்றப்போவதாக தளபதி விஜய் தரப்பிலிருந்து செய்திகள் வெளிவருகின்றன. 


அஜித் எப்போதுமே கார்ப்பரேட் நிறுவனங்களை தயாரிப்பாளர்களாக ஒப்பந்தம் செய்யமாட்டார். கடந்த சில வருடங்களாக தல அஜித் இந்த பாலிசியை கடைபிடித்து வருகிறார். அதே போல் விஜய்யும் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

Next Story
Share it