காமெடி நடிகர் சதிஸ்க்கு , வாட்ஸ் அப்பில் மெசெஜ் அனுப்பிய சத்யராஜ் !! வைரலாகும் வீடியோ

காமெடி நடிகர் சதிஸ்க்கு , வாட்ஸ் அப்பில் மெசெஜ் அனுப்பிய சத்யராஜ் !! வைரலாகும் வீடியோ

காமெடி நடிகர் சதிஸ்க்கு , வாட்ஸ் அப்பில் மெசெஜ் அனுப்பிய சத்யராஜ் !! வைரலாகும் வீடியோ
X

தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் சந்தானத்தின் காமெடி குறைந்து போன நிலையில் தற்போது பல்வேறு காமெடி நடிகர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அந்த வரிசையில் காமெடி நடிகர் சதீசும் ஒருவர். காமெடி நடிகர் சதீஸ் முதன் முதலில் ஏ. எல் விஜய் இயக்கிய பொய் சொல்ல போறோம் என்ற காமெடி படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார்.

அதன் பின்னர் மதராஸபட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே போன்ற படங்களில் காமெடியனாக நடித்தார். கீர்த்தி சுரேஷ் அவர்களை ஒரு தலையாக காதலிக்கிறேன் என்று வெளிப்படையாக ஒரு முறை கூறியுள்ளார், ஆனால் வேலைக்கு ஆகவில்லை.

பின் சிக்ஸர் பட இயக்குனரின் தங்கையை திருமணம் செய்தார். இந்த திருமணம் காதல் திருமணம் என்று செய்திகள் வந்த நிலையில், ‘சிக்சர்’ இயக்குநர் தனது டுவிட்டர் பக்கத்தில் இது உண்மையான நிச்சயிக்கப்பட்ட திருமணம் என தெரிவித்தார். இந்நிலையில் நடிகர் சதீஷ் தமிழ் படம் 2வில் வித்யாசமான பல கேட்ட கெட்டப்புகளில் நடித்திருந்தார்.

அதில் ஒன்று ‘நூறாவது நாள்’ படத்தில் மொட்டையடித்துக் கொண்டு ரெட் கலர் உடையில் வில்லனாக வந்த சத்யராஜின் கெட்டப். இந்த மேக் ஓவர் வீடியோவை இணையத்தில் வெளியிட்ட சதீஷிற்கு சத்தியராஜ் வாட்ஸ் ஆப்’ல் dear சதீஷ் சூப்பர். என்று மெஸேஜ் அனுப்பியிருக்கிறார். இதனை சதீஷ் மிகப் பெரிய விருது சத்யராஜ் சார் அவர்களிடமிருந்து என கூறி Screen Shot எடுத்து வெளியிட்டுள்ளார்.

Newstm.in

Next Story
Share it