காதலன் எதிரிலேயே காதலியை பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரன்கள்

கோவையில் காதலன் கண் முன்னே காதலியை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து பாலியல் பலாத்காரம் செய்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
 | 

காதலன் எதிரிலேயே காதலியை  பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரன்கள்

கோவையில் காதலன் கண் முன்னே காதலியை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து பாலியல் பலாத்காரம் செய்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் கடந்த 26ஆம் தேதி 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அங்குள்ள பார்க்கில் காதலனுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு கும்பல் அவர்கள் இருவரையும் தாக்கி, காதலன் கண்முன்னே காதலியின் டிரஸ்களை அவிழ்க்க சொல்லி, அதை வீடியோ எடுத்துள்ளனர். இருவரும் அந்த கும்பலிடம் கெஞ்சியுள்ளனர். ஆனால், அவர்களோ அதையெல்லாம் பொருட்படுத்தாமல், கூட்டாக அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர். 

இதையடுத்து, நடந்த சம்பங்களை அம்மாணவி பெற்றோரிடம் கூறினார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது தொடர்பாக அனைத்து மகளிர் மேற்கு பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு விசாரித்ததில், சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 6 பேர் மாணவியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, 4 பேரை கைது செய்த போலீசார் முக்கிய குற்றவாளியான இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP