கல்லூரி விடுமுறை !! வீட்டில் வெறுப்பா இருக்குது !! குட்டையில் குளிக்க சென்ற 5 கல்லூரி மாணவர்கள் !! பிணமாக வந்தனர்

கல்லூரி விடுமுறை !! வீட்டில் வெறுப்பா இருக்குது !! குட்டையில் குளிக்க சென்ற 5 கல்லூரி மாணவர்கள் !! பிணமாக வந்தனர்

கல்லூரி விடுமுறை !! வீட்டில் வெறுப்பா இருக்குது !! குட்டையில் குளிக்க சென்ற 5 கல்லூரி மாணவர்கள் !! பிணமாக வந்தனர்
X

கோயம்புத்தூர் , அன்னூர் கணேசபுரம் பகுதியை சார்ந்தவர் ப்ரனேஷ் (20). யஷ்வந்த் (20). கதிரேசன் (20) ரகுராம் (20). சுரேஷ் ராஜ் (20). இவர்கள் 5 பேரும் நண்பர்கள் ஆவார்கள். தற்போது கொரோனா காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் , வீட்டிலேயே இருந்து வந்த ஐவரும் , நேற்று காலை அங்குள்ள பவானிசாகர் அணைக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இதன்படி, நேற்று காலை சுமார் 3 இரு சக்கர வாகனத்தில் பவானி சேகருக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்குள்ள அணை பகுதியில் பொழுதை கழித்த நிலையில் , மதியம் சுமார் 12 மணியளவில் நீர்தேக்க பகுதியான சித்தன்குட்டை பகுதிக்கு வந்துள்ளனர்.

கரையில் அமர்ந்திருந்த இவருக்கும் குளிக்க ஆவல் ஏற்பட்டு, நீரில் இறங்கியுள்ளனர். இதில் சுரேஷ்ராஜ் மட்டும் குளிக்க வரவில்லை என்று கூறி கரையிலேயே அமர்ந்துள்ளார். இதனையடுத்து ப்ரனேஷ், யஷ்வந்த், கதிரேசன், ரகுராம் ஆகிய நால்வரும் நீரில் குளித்துக் கொண்டு இருந்துள்ளனர்.

இவர்கள் திடீரென ஆழமான பகுதிக்கு செல்லவே, இவர்களுக்கு நீச்சலும் தெரியாததால் நீரில் மூழ்க துவங்கி அலறித்துள்ளனர். அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத நிலையில், சுரேஷிற்கும் நீச்சல் தெரியாததால் பவானி சாகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர். நண்பர்கள் 4 பேரும் நீரில் தத்தளித்து மூழ்கிய நிலையில், சுமார் 3.30 மணியளவில் இவர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

நால்வரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக காவல் துறையினர் அனுப்பி வைத்த நிலையில் , இந்த விஷயம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் சத்தியமங்கலம் மருத்துவமனையில் கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Newstm.in

Next Story
Share it