1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது.. மத்திய அரசுக்கு பதில் !

தமிழகத்தில் கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது.. மத்திய அரசுக்கு பதில் !

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்கள் பள்ளி தேர்வுகளை ரத்து செய்துள்ளது.

அதேநேரத்தில் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நடைபெறும் தேர்வுகள் குறித்து முறையான அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. இது மாணவர்களை குழப்பம் அடையச் செய்கிறது.

இந்நிலையில், வரும் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.

தமிழகத்தில் கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது.. மத்திய அரசுக்கு பதில் !

இதனையடுத்து, கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

 இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

தமிழகத்தில் கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது.. மத்திய அரசுக்கு பதில் !

அதில், செப்டம்பர் மாதத்திற்குள் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் உள்ளதாக கூறி உள்ளார். மேலும், செமஸ்டர் தேர்வுகளை எப்போது நடத்துவது என்பதை மாநில அரசுகளே தீர்மானிக்க அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.
 
newstm.in 

Trending News

Latest News

You May Like