கலெக்டர் எச்சரிக்கை… கடை உரிமையாளர்களே, இதை கடைப்பிடிங்க..!

 | 
“கடைகளின் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் சானிடைசர் வைக்க வேண்டும். பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்” என்று, மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “முகக் கவசம் மற்றும் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்காவிட்டால் கொரோனா மூன்றாவது அலையில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவது என்பது அவ்வளவு எளிதாக இருக்காது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் கடை உரிமையாளர்கள் முகக் கவசம் மற்றும் தனிமனித இடைவெளி போன்ற கொரோனா விழிப்புணர்வு குறித்த தகவல் பலகை வைக்க வேண்டும்.

கடைகளின் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கண்டிப்பாக சானிடைசர் வைக்க வேண்டும். பொதுமக்கள் முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். இல்லை என்றால், சம்பந்தப்பட்ட கடைகள் மீது அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து இதே போல அலட்சியமாக செயல்பட்டால், கடைகளை மூடி ‘சீல்’ வைக்கப்படும்.

இதற்காக அமைக்கப்பட்ட குழுவினர், வரும் காலங்களில் தீவிரமாக ரோந்து பணியை மேற்கொண்டு கடைகள், மார்க்கெட் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் முகக் கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

காய்ச்சல் முகாம்களில் கொரோனா, டெங்கு மற்றும் ஜிகா வைரஸ் போன்ற நோய்களின் அறிகுறிகள் உள்ள அனைவரும் பங்கேற்று நோயை விரைவில் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை பெற்றுக்கொள்ளலாம்” என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP