சென்னையில் இறைச்சிக்கடை, மீன்கடைகள் மூடல்!

சென்னையில் இறைச்சிக்கடை, மீன்கடைகள் மூடல்!

சென்னையில் இறைச்சிக்கடை, மீன்கடைகள் மூடல்!
X

சென்னை மாநகராட்சியில் பொதுமுடக்க காலத்தில் இறைச்சிக்கடைகளை மூட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பரவலை தடுக்க ஜூன் 30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் இறைச்சிக்கூடங்கள் மற்றும் இறைச்சிக்கடைகளை திறக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய நான்கு பகுதிகளில் உள்ள இறைச்சிக்கூடங்களை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர சென்னை மாநகராட்சி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கோழி/ஆடு/மாடு இறைச்சிக்கூடங்கள் மற்றும் மீன் கடைகளை ஆகியவை முழுமையாக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வியபாரிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it