1. Home
  2. தமிழ்நாடு

தண்ணீரில் சினிமா.. புது முயற்சியில் பாரிஸ்...!

தண்ணீரில் சினிமா.. புது முயற்சியில் பாரிஸ்...!


உலகம் முழுவதும் கொரோனா அச்சத்தில் சமூக இடைவெளியினை கடைபிடித்து வருகின்றனர். சில நாடுகளில் இன்றும் ஊரடங்கு நீடித்து வருகிறது அதனால் மக்களின் பொழுதுபோக்கான திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்நேரத்தில் பாரிஸ் நகரில் சமூக இடைவெளியுடன் தண்ணீரில் சினிமா திரையரங்கு தொடங்க உள்ளது.

பிரான்சின் தலை நகரமாக இருக்க கூடிய பாரிஸ் நகரில் ஒவ்வொரு வருடமும்  கோடை காலத்தில் பாரிஸ் பிளேஜஸ் என்கிற நிகழ்ச்சி கொண்டாடப்படும். 

இதில் புகழ்பெற்ற சீன் ஆற்றின் நடுவே  கடற்கரை உருவாக்கப்பட்டு விழாவானது கலைகட்டும் இந்த வருடமும் பிளேஜஸ் நிகழ்ச்சியை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். அதன்படி சீன் ஆற்றின் நடுவில் மிதக்கும் திரையரங்கை அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

  இந்த நிகழ்ச்சி வரும் 18ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு "சுர் எல் யோ" என பெயரிடப்பட்டுள்ளனர்.

தமிழில் இதற்கு பெயர் "தண்ணீரில் சினிமா" என்பது பொருளாகும். இந்த  திரையில்  காண்பதற்காக 38 மின்சார படகுகள் தயார் நிலையில் உள்ளன.

 சமூக இடைவெளி வெளியினை கடைபிடித்து  ஒவ்வொரு படகிலும் இரண்டு முதல் 6 பேர்வரை அமர்ந்து திரைப்படத்தை ரசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக பிரான்சில் திரையரங்கு முழுவதும் மூடபட்டுள்ள நிலையில்  கடந்த ஜூன் மாதம் முதல் 50 சதவீதம் பேர்  மட்டுமே தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. என்பது குறிபிடதக்கது..

இந்த நிகழ்வை பிரான்ஸ் நாடு வரவேற்று உள்ளது. கொரோனா தொற்றை குறைக்கவும் அதே நேரம் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வரும் காலத்தில் இது போன்ற தண்ணீரில் சினிமா காட்சிகளை நடத்தலாம் என்று பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like