சி.எம். கேரக்டரா... ஆளைவிடுங்க...! ஓட்டம் பிடித்த தளபதி!

சி.எம். கேரக்டரா... ஆளைவிடுங்க...! ஓட்டம் பிடித்த தளபதி!

சி.எம். கேரக்டரா... ஆளைவிடுங்க...! ஓட்டம் பிடித்த தளபதி!
X

தமிழ் சினிமாவின் கலெக்ஷன் என்றால் அது தளபதி விஜய் தான். அவர் சமீபத்தில் நடித்த படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக செம ஹிட். அவர் வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் போட்டி போடுகின்றனர். மாஸ்டர் படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 படத்தில் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் விஜய். 

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் விஜய், அஜித் போன்றவர்களை இயக்க முடிவெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. தளபதி விஜய் நடிப்பில் ஷங்கர் முதன்முதலாக இணைய இருந்த படம் முதல்வன். தனக்கு அந்த கதை செட் ஆகாது என விஜய் மறுத்ததால் அர்ஜுனை வைத்து சூப்பர் ஹிட் படமாக கொடுத்தார். இந்நிலையில் முதல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்குமாறு இயக்குநர் ஷங்கர் கேட்டதாகவும் ஆனால் அதற்கு நடிகர் விஜய், முதலமைச்சர் கேரக்டர் என்பதால் நிராகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

newstm.in

Next Story
Share it